×

பாரி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

நெல்லிக்குப்பம், டிச. 11: நெல்லிக்குப்பம் இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பட்டம் துவக்க விழா நடந்தது. இதனை முன்னிட்டு கரும்பு அரவை இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கணபதி ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. ஆலை உதவி துணை தலைவர்கள் ராமசுப்புரமணியன், சங்கரலிங்கம், உதவி பொது மேலாளர்கள் நடராஜன், மதிவாணன் ஆகியோர் தலைமை தாங்கி முதல் அரவையை துவக்கி வைத்தனர். இதில் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். நடப்பு கரும்பு அரவை பட்டத்தில் 10 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கரும்புக்கான பணத்தை 15 நாட்களுக்குள் ஒரே தவணையாக வழங்கி வருகிறோம். கரும்பு சாகுபடி செய்ய ஆட்கள் தேவையை குறைக்க 5 அடி இடைவெளியில் கரும்பு பயிரிட்டால் நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்கள் பயன்படுத்த முடியும். மேலும் சொட்டுநீர் முறையை கடைபிடித்தால் தண்ணீர், உரம் தேவை குறையும், மகசூல் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு பயிரிட்டு அதிக லாபம் பெறலாம் என உதவி துணை தலைவர் சங்கரலிங்கம் கூறினார்.  


Tags : Barry Sugar Mill ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை